Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
வீழ்வது வெட்கமில்லை
வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்
வீழ்வது எழுவதற்காகவே!
அழுவதற்காக அல்ல!
ஓடுவது நதியல்ல; நீர்தான்
கடப்பது காலம் அல்ல; நாம் தான்
இருள் இருள் என்று மூலையில் முடங்கி
கிடப்பதைவிட அந்த இருளைப் போக்க
ஓர் மெழுகுவர்த்தியை தேடு!
நேரமும் அலையும் ஒரு போதும்
மனிதனுக்காக காத்திருப்பதில்லை,
விதி விதி என்று
மதி கெட்டிட வேண்டாம்
தடைக்கல்லும் நமக்கு படிக்கல்லே!
அன்பை முகத்தில் வை!
ஆசையை அளவில் வை!
இனிமையை பேச்சில் வை!
ஈகையை கையில் வை!
உண்மையை சொல்லில் வை!
ஊக்கத்தை உழைப்பில் வை!
எண்ணத்தை எழுத்தில் வை!
ஏற்றத்தை மனதில் வை!
ஐயத்தை விலக்கி வை!
ஒழுக்கதை உள்ளத்தில் வை!
ஓடமாய் உள்ளத்தை வைக்காதே!
ஒளவியம் எள்ளளவும் வைக்காதே!
அஃதே உன் கொள்கையாய் வை!