1. இன்றே செய்யக்கூடிய விஷயத்தை நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.
2. நீங்களாக செய்யக்கூடிய விஷயத்திற்கு மற்றவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் வரும் முன்பே ‍அந்தப் பணத்தை நம்பி செலவை செய்துவிட்டுக் காத்திருக்காதீர்கள்.
4. மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தேவையில்லாத பொருட்களை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தைவிட சுயமரியாதை மதிப்புமிக்கது என்பதை மறவாதீர்கள்.
6. ‍‍எவ்வளவு முடியுமோ ‍‍அவ்வளவு குறைவாகச் சாப்பிடுங்கள்.
7. விருப்பப்பட்டு செய்யும்போது எந்தக் காரியமும் எளிது என்பதை மறவாதீர்கள்.
8. நடக்கவே நடக்காத தீமைகளைக் கற்பனை செய்று கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
9. எல்லா விஷயங்களையும் மென்மையாகவும், நிதானமாகவும் கையாளுங்கள்.
10.கோபமாயிருக்கும் போது பேச நேர்ந்தால் பத்துவரை எண்ணுங்கள். அதிகக் கோபமாய் இருந்ததால் நூறுவரை எண்ணுங்கள்.