"வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டுவிட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப்போகிறீர்கள்" என்றார் அப்துல் ரகுமான். குழந்தைகளின் உலகத்தையும் உள்ளத்தையும் நாம் புரிந்துகொள்ள... இதோ... அவர்கள் நமக்கு சொல்ல நினைக்கும் விஷயங்கள்...
1. என் கைகள் சின்னஞ்சிறியவை, நான் பந்து வீசினாலோ, படம் வரைந்தாலோ, நீங்கள் எதிர்பார்க்கும்படி இருக்காது. இருந்தாலும் என்னைப் பாராட்டுங்கள். என் கால்கள் சின்னஞ்சிறியவை, என்னோடு நடக்கும்போது கொஞ்சம் மெதுவாக நடங்கள். நானும் கூட வருகிறேனில்லையா.!
2. நீங்கள் பார்த்த அளவு இந்த உலகை நான் பார்த்ததில்லை. நானாகப் பார்த்துக் தெரிந்து கொள்ள அனுமதியுங்கள். எதற்கெடுத்தாலும் தடைவிதிக்காதீர்கள்.
3. வீட்டுவேலை இருக்கத்தான் செய்யும். ஆனால் நான் குழந்தையாய் இருக்கப்போவது கொஞ்சகாலம்தானே. நான் வளரும் முன் எனக்குச் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்ல நேரம் ஒதுக்குங்கள்.
4. என் பிஞ்சு மனம் மென்மையானது. என்னைத் திட்டிக்கொண்டே இருக்காதீர்கள். முடிந்த அளவு இதமாக என்னை நடத்துங்கள்.
5. நீங்கள் கேட்டதால் உங்களுக்குக் கடவுள் கொடுத்த பரிசல்லவா நான்! என்னைப் பொறுப்போடு கையாளுங்கள். பொறுமையாக வழி நடத்துங்கள்.
6. நான் வளர்வதற்கும் மலர்வதற்கும் உங்கள் பாராட்டும் அன்பும் தேவை. எனக்கு ஊக்கம் கொடுங்கள். மென்மையாக தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். வலிக்கும் விதமாக விமர்சிக்காதீர்கள்.
7.என் தவறுகளை நானே உணர்ந்து திருத்திக்கொள்ள வாய்ப்புக் கொடுங்கள். சின்னச் சின்னப் பிழைகளை மாற்றக் கொள்ள நேரம் கொடுங்கள்.
8. சில விஷயங்களை சிரமப்பட்டாவத நானே செய்து கொள்கிறேன். என்னால் முடியாது என்று தீர்மானிக்காதீர்கள். என் சகோதரர்களுடனோ பிற குழந்தைகளுடனோ ஒப்பிட்டு என்னைத் திட்டாதீர்கள்.
9. பிரார்த்தனை செய்கிற இடங்களுக்கும், பிறருக்கு உதவும் இடங்களுக்கும் என்னை அழைத்துச் செல்லுங்கள்.
10. என்னை தண்டிக்க நினைப்பீர்களானால், ஒரு தடவைக்கு இரண்டு தடவை... யோசியுங்கள். கடுமையான வார்த்தைகளை தயவு செய்து சொல்லாதீர்கள்.
__________________________________________________
0 comments:
Post a Comment